Skip to content

துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு..

  • by Authour

இந்தியாவின் 15ஆவது துணை குடியரசுத் தலைவராக பதவியேற்றார் தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்த பதவியேற்பு நிகழ்வில், முன்னாள் துணை குடியரசுத் தலைவரான ஜெகதீப் தன்கர் கலந்து கொண்டார்.

கடந்த செப்.9-ம் தேதி நடந்த தேர்தலில், 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில், தற்போது டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்று வரும் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும், மத்திய அமைச்சர்கள், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், தமிழக அரசியல் தலைவர்கள் தம்பிதுரை, நயினார் நாகேந்திரன், ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

40 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தை சேர்ந்த ஒருவர் துணை ஜனாதிபதி பதவியில் அமர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சந்திராபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன் (எ) சி.பி.ராதாகிருஷ்ணன், அக்.20, 1957-ல் பிறந்தார். இளம் வயதிலேயே சமூகப் பணியில் ஆர்வம் கொண்டவர், RSS, ஜனசங்கத்தில் உறுப்பினர். 1998-ல் கோவை எம்பியானார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடன் நட்புறவில் இருந்தவர். 2004-07 இல் தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்தார். அப்போது 19,000 கிமீ ரத யாத்திரை நடத்தினார். 3 மாநிலங்களுக்கு கவர்னராக இருந்தவர் தற்போது துணை ஜனாதிபதியாக உயர்ந்துள்ளார்

error: Content is protected !!