Skip to content
Home » யாருக்கும் எதிரானது அல்ல….. CAA என்றால் என்ன? விரிவான பார்வை

யாருக்கும் எதிரானது அல்ல….. CAA என்றால் என்ன? விரிவான பார்வை

  • by Senthil

குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) 2019ல் இந்தியாவில்  அறிமுகப்படுத்தப்பட்டது என்றாலும் 2 தினங்களுக்கு முன் தான் அது அமலுக்கு வந்துள்ளது. இந்த சிஏஏ சட்டம்  சர்ச்சைளுக்கும் வதந்திகளுக்கும் உள்ளாகி இருக்கிறது. இந்த சட்டத்தின் நுணுக்கமான மற்றும் துல்லியமான புரிதலை  மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றால், CAAவைச் சுற்றி நிலவும் கட்டுக்கதைகளுக்கும் வதந்திகளுக்கும் தீர்வு காண்பது முக்கியம்.

CAA பாரபட்சமான சட்டம் என்று பொதுவான கருத்து நிலவுகிறது. இது தவறானது.  மதத்தின் அடிப்படையில் பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற அண்டை நாடுகளில் இருந்து முஸ்லிம் அல்லாத சிறுபான்மையினரை தெரிவு செய்து   குடியுரிமை வழங்குகிறது என்றும்  இந்த இந்த சட்டத்தின் மீது விமர்சனங்கள் உண்டு. ஆனால், இந்த நாடுகளில் ஒடுக்குமுறையை எதிர்கொண்ட இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள், ஜைனர்கள் மற்றும் பார்சிகள் உள்ளிட்ட மத சிறுபான்மையின அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதே CAA வின் வெளிப்படையான நோக்கம். இது இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் உள்பட எந்த மத சமூகத்திற்கும் எதிரான பாகுபாடு அல்ல.

CAA என்பது தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (NRC) முன்னோடி என்றும் சில சமூகங்கள், குறிப்பாக முஸ்லிம்கள், விலக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என்றும் கூட வதந்திகளை பரப்புகின்றனர். CAA மற்றும் NRC ஆகியவை தனித்தனியான செயல்முறைகள். CAA குறிப்பிட்ட ஒடுக்கப்பட்ட சிறுபான்மை சமூகங்களுக்கு மட்டும் துரிதமாக குடியுரிமை பெறும் பாதையை வழங்குகிறது. அதே சமயம், NRC இந்தியாவில் வசிக்கும் குடிமக்களை அடையாளம் கண்டு சரிபார்க்கும் நோக்கம் கொண்டது. CAA இந்திய குடிமக்களின் தற்போதைய உரிமைகளை எந்தவிதத்திலும் பாதிக்காது.

மேலும், NRCயின் குடியுரிமைச் சரிபார்ப்புச் செயல்பாட்டின் போது CAA மூலமாக பாரபட்சம் காட்டப்படும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. CAA சட்டம் NRCயின் முன்னோடி அல்ல. NRC பற்றிய சந்தேகங்கள் பிரத்யேகமாக தீர்க்கப்பட வேண்டும்.

CAA இந்திய அரசியலமைப்பில் உள்ள மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு முரணானது என்ற கருத்தும் தவறானது. குறிப்பிட்ட மத சமூகங்களுக்கு ஆதரவளிப்பதன் மூலம், CAA நாட்டின் மதச்சார்பற்ற கட்டமைப்பை மீறுவதாக விமர்சகர்கள் வாதிடுகின்றனர். இருப்பினும், சில மத சிறுபான்மையினர் வரலாற்றிலும் சமகாலத்திலும் எதிர்கொள்ளும் ஒடுக்கு முறைகளுக்கு நமது அரசியலமைப்பு நெறிமுறைகளை பின்பற்றி தீர்வு காண முற்படுகிறது.

அசாம் மாநிலத்தில் சட்டவிரோத குடியேற்றம் தொடர்பான பிரச்சினையை தீர்ப்பதற்காக 1985 ல் கையெழுத்திடப்பட்ட அசாம் ஒப்பந்தத்தை CAA குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்பதும் ஒரு தவறான கருத்து. அசாமில் சட்டவிரோதமாக நுழைந்த நபர்களுக்கு குடியுரிமை வழங்குவதால் CAA அசாம் ஒப்பந்தத்திற்கு  முரணானது என்று சிலர் வாதிடுகின்றனர். இருப்பினும், அசாம் மற்றும் பிற வடகிழக்கு மாநிலங்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கான விதிகளை CAA கொண்டுள்ளது.வடகிழக்கு மாநில அரசுகள் CAAவில் இருந்து சில பகுதிகளுக்கு விலக்களிக்கலாம். இதனால், உள்ளூர் மக்கள்தொகைப் புள்ளிவிவரங்களில் பெரிய பாதிப்புகளைத் தவிர்க்க முடியும்.

மேலும், மியான்மரில் இருந்து ரோஹிங்கியாக்கள் போன்ற ஒடுக்கப்பட்ட முஸ்லிம் சமூகங்களை CAA புறக்கணிக்கிறது என்ற தவறான கருத்தும் உள்ளது. அண்டை நாடுகளில் CAA கவனம் செலுத்துவதால், ஒடுக்கப்பட்ட  முஸ்லிம்களின் அவலநிலையை இந்திய அரசாங்கம் புறக்கணிக்கிறது என்று அர்த்தமல்ல. இந்த சட்டம் அண்டை நாடுகளில் நிலவும் சில குறிப்பிட்ட சூழ்நிலைகளை கையாள்கிறது. அனால், பிற மனிதாபிமான முயற்சிகள் அல்லது பரிசீலனைகளைத் தடுக்காது.

புரிந்துணர்வு மிக்க விவாதங்களை எளிதாக்க குடியுரிமை திருத்தச் சட்டத்தைச் சுற்றியுள்ள தவறான கண்ணோட்டங்களை அகற்றுவது அவசியம். இந்திய குடிமக்களின் உரிமைகளை பாதிக்காமலும் மதச்சார்பின்மை கொள்கைகளை மீறாமலும், அண்டை நாடுகளில் மத சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைக்கு மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காண்பதே CAAவின் நோக்கம். இந்தப் விஷயத்தில் புரிந்துணர்வோடு கூடிய ஆக்கபூர்வமான உரையாடல்களை வளர்ப்பதற்கு தவறான கண்ணோட்டங்களைக் களைவது அவசியம்.

 

குடியுரிமை திருத்த சட்டத்தை ஆய்வு செய்தல்…

அண்டைநாடுகளில் இருந்து துன்புறுத்தப்படும்சிறுபான்மையினருக்கு விரைவாககுடியுரிமைவழங்குவதன்மூலம், புலம்பெயர்ந்தசமூகங்கள்நம்நாட்டில்எதிர்கொள்ளும்பிரச்னைகளை CAA தீர்த்துவிடும். இதுஅனைத்துகுடிமக்களுக்களின்மதசார்புகளைப்பொருட்படுத்தாமல்அவர்களின்மேம்பட்டவாழ்க்கைக்கு வழிவகுக்கும்.

மேலும், துன்புறுத்தப்பட்டசிறுபான்மையினருக்கு CAA வின்மூலம்இந்தியாவில்அடைக்கலம்அளிப்பதால், இந்திய முஸ்லிம்கள்தற்போது அனுபவிக்கும் உரிமைகள்மற்றும் சலுகைகளில்எவ்விதமாற்றமும்இருக்காது. மாறாக, இதுஇந்தியாவின்மனிதாபிமானமிக்ககொள்கையையும், மதச்சார்பின்மையையும் நிலைநாட்டும் வகையில் விளிம்புநிலையில்உள்ளசமூகங்களுக்குஅவர்களின்மதநம்பிக்கையைப்பொருட்படுத்தாமல்அவர்களுக்குஆதரவுகரத்தைநீட்டியுள்ளது.

இந்தியாவில் உள்ள பல்வேறுமதக்குழுக்களிடையே ஒற்றுமைஉணர்வைவளர்க்கும்ஆற்றலைஇந்தச்சட்டம்கொண்டுள்ளது. அண்டைநாடுகளில்சிறுபான்மையினர்எதிர்கொள்ளும்போராட்டங்களைஅங்கீகரித்துஅவர்களுக்குஅடைக்கலம்

வழங்குவதன்மூலம்,சிஏஏவகுப்புவாதபிளவுகளைக்குறைத்துசமூகஒற்றுமையைவலுப்படுத்த உதவும்என்றசக்திவாய்ந்தசெய்தியைதெரிவிக்கிறது.

துன்புறுத்தப்பட்டசிறுபான்மையினரைப் பாதுகாப்பதில் CAA வின்முக்கியத்துவம், பிராந்தியத்தில் மதசுதந்திரம் மற்றும்பன்முகத்துவத்தைப்பாதுகாப்பதற்கான இந்தியாவின்குறிக்கோளுடன்ஒத்துப்போகிறது. மத  துன்புறுத்தலில்இருந்துதப்பிக்கும்தனிநபர்களுக்குபாதுகாப்பான புகலிடம் வழங்குவதன்மூலம், இந்தியாஅனைத்துமதசமூகங்களின்உரிமைகளைநிலைநிறுத்துவதற்கான தனதுஉறுதிப்பாட்டைமீண்டும்உறுதிப்படுத்துகிறது. CAA வைபற்றியசீரானமற்றும்நுணுக்கமானபுரிதல்இருந்தால் மட்டுமேஇந்தியாவின்மாறுபட்டநிலப்பரப்பில்பல்வேறுமதங்களின்மீதுஉள்ளதாக்கம்தெரியவரும்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!