கோவையில் இருந்து ஊட்டிக்கு செல்லும் முக்கிய சாலையாக மேட்டுப்பாளையம் சாலை உள்ளது. இந்நிலையில் அந்த சாலையில் கடந்த சில மாதங்களாக மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதால், அந்த சாலையில் எப்பொழுதும் போக்குவரத்து நெரிசலாக காணப்படும்.
இந்நிலையில் இந்த சாலையில் காலை நல்லம்பாளையம் ராமசாமி நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தமிழக அரசு போக்குவரத்துக் கழக நடத்துனர் ஜோதிராஜ். இவர் சாய்பாபா காலினியில் இருந்து மேட்டுப்பாளையம் சாலையில் வழியாக நல்லாம்பாளையத்தில் உள்ள வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அந்த காரில் பெட்ரோல் மற்றும் கேஸ் இணைப்பும் உள்ளது.
அப்போது அவரது காரில் இருந்து பெட்ரோல் கசிந்து உள்ளது. இதுகுறித்து சாலையில் சென்ற மற்ற வாகன ஓட்டிகள் அவரிடம் கூறி உள்ளனர். இதனை அடுத்து பெட்ரோல் தீர்ந்து விட்டது என்று கேஸ் – க்கு மாற்றி உள்ளார். அப்பொழுது லேசான சத்தம் வந்து உள்ளது. திடீரென காரின் முன் பகுதியில் தீப்பற்றிய எரிந்ததை கண்டு அவர் உடனடியாக காரில் இருந்து கீழே இறங்கி விட்டார். கார் மளமளவென தீப்பிடித்து எரியத் துவங்கியது. இது குறித்து கவுண்டம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மேலும் தீ மேலும் பரவாமல் அனைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்த தீ விபத்து முற்றிலும் கார் எரிந்து சேதம் அடைந்தது. பெட்ரோல் மற்றும் கேஸ் இணைப்பு உள்ள கார் நடுரோட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.