Skip to content

தாறுமாறாக வந்து கவிழ்ந்த கார்- போதை தௌிந்து காரை காணவில்லை புகார்

கோவை, பொள்ளாச்சி ஆழியார் சாலை மணல்மேடு பகுதியில் மாலை பொள்ளாச்சியில் இருந்து ஆழியார் நோக்கி வேகமாகவும், தாறுமாறாகவும் கார் ஒன்று வந்துள்ளது. திடிரென நிலை தடுமாறி வந்த கார் வலது புறம் சாலை ஓரத்தில் நின்று கொண்டு இருந்த இரு சக்கர வாகனம் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. பின்னர் காரில் இருந்த நபர் தலைக்கேறிய போதையில் வெளியேறி சாலையோரத்தில் குறட்டை விட்டு படுத்து அங்கிருந்த பொதுமக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியது. பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த கோட்டூர் காவல்துறையினர் சாலையோரம்

கவிழ்ந்து இருந்த காரை கிரேன் மூலம் மீட்டு கோட்டூர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். தலைக்கேறிய போதையில் இருந்த நபர் பொள்ளாச்சி அருகே உள்ள தேவம்பாடி வலசு பகுதி சேர்ந்த ரமேஷ் குமார் என்பதும், இவர் மது போதையில் காரை ஓட்டி வந்தது தெரிய வந்தது. தாறுமாறாக கார் வந்த நேரத்தில் எதிரே எந்த வாகனம் வராததால் நல்வாய்ப்பாக பெரும் விபத்து

தவிர்க்கப்பட்டது மேலும் மது போதையில் இருந்த ரமேஷ் குமார் குடி போதை தெளிந்த உடன் தனது காரை காணவில்லை என கோட்டூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!