தூத்துக்குடி மாவட்டம் கோவில்பத்து விஏஓவாக இருந்த லூர்து பிரான்சிஸ் நேற்று முன்தினம் 2 பேரால், அலுவலகத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மணல் கடத்தலை தடுத்ததால், இந்த கொலை நடந்ததாக கூறப்பட்டது. இதனால் இக்கொலை தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஏஓ உடல் பிரேத பரிசோதனை முடிந்து இன்று சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.
‘இது தொடர்பாக மாரிமுத்து, ராமசுப்பிரமணியன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 12 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் விஏஓவின் மகன் இயேசுவுடையான் அளித்த புகாரின் பேரில், கொலை மிரட்டல், பயங்கர ஆயுதங்கள் கொண்டு தாக்குதல், அரசு பணியாளரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் 2 பேர் மீதும் போலீசார் இன்று வழக்குப்பதிந்தனர். தொடர்ந்து 2 பேரிடமும் விசாரணை நடந்தது.
