கரூர் அருகே சமையல் எரிவாயு சிலிண்டரை ஆம்னி வாகனத்திற்கு சட்ட விரோதமாக பயன்படுத்திய நபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கரூர் மாவட்டம் தென்னிலை அருகே வைரமடை சோதனை சாவடி அருகே தனியார் ஆட்டோ ஒர்க்ஸ் உரிமையாளர் பிரபு என்பவர் சட்ட விரோதமாக வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டரை நான்கு சக்கர வாகனங்களுக்கு ஏற்றி பல வருடங்களாக சட்டவிரோதமாக தொழில் செய்து வந்துள்ளார்.
இது தொடர்பாக வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் மூன்று சமையல் சிலிண்டரை பறிமுதல் செய்து பிரபு என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
