திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் கடந்த 17ம் தேதி மாலை 6 மணிக்கு பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பஹல்காம் தாக்குதலை கண்டித்தும், வக்பு வாரிய சட்ட திருத்தத்தை ஆதரித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பேசிய பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா, பாஜக மாநில செயலாளர் கருப்பு முருகானந்தம், பாஜக மாவட்ட தலைவர் செல்வம், சையத் இப்ராகிம், ஆகியோர் மத மோதலை உருவாக்கும் வகையில் பேசியதாக இவர்கள் மீது முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முத்துப்பேட்டையில், ஹெச். ராஜா , கருப்பு முருகானந்தம் மீது வழக்கு
- by Authour
