Skip to content

ஆன்மீகம்

இன்றைய ராசிபலன் – 01.05.2023

இன்றைய ராசிப்பலன் – 01.05.2023 மேஷம் இன்று நீங்கள் செய்ய நினைத்த செயல்கள் பாதியில் தடைப்படலாம். வீண் பிரச்சினைகள் தேடி வரும். எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து… Read More »இன்றைய ராசிபலன் – 01.05.2023

இன்றைய ராசிபலன் – 30.04.2023

இன்றைய ராசிப்பலன் – 30.04.2023 மேஷம் இன்று நீங்கள் எந்த செயலையும் செய்து முடிக்க கடின உழைப்பு தேவை. வேலையில் மற்றவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வியாபாரத்தில் வருமானம் பெருகுவதற்கான… Read More »இன்றைய ராசிபலன் – 30.04.2023

இன்றைய ராசிபலன் – (29.04.2023)

மேஷம் இன்று குடும்பத்தினருடன் சிறு சிறு மனசங்கடங்கள் ஏற்படும். வண்டி வாகனங்களால் வீண் விரயங்கள் உண்டாகும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. அலுவலகத்தில் உடனிருப்பவர்களால் அனுகூலம் ஏற்படும். வியாபாரத்தில் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் எதிர்பார்த்த லாபம் கிட்டும். ரிஷபம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நடைபெறும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். வியாபார முன்னேற்றத்திற்காக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும். இது வரை வராத கடன்கள் வசூலாகும். பொன்பொருள் சேரும். மிதுனம் இன்று வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் உண்டாகும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். ஆடம்பர பொருள் வாங்குவதில் கவனம் தேவை. உத்தியோகத்தில் உடன் பணிபுரிவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். கடகம் இன்று எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரம் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். சிம்மம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். வீட்டில் பெரியவர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். பூர்வீக சொத்துகள் வழியில் எதிர்பார்த்த லாபம் அடைவீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான திட்டங்கள் நிறைவேறும். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும். கன்னி இன்று உங்களுக்கு பணபுழக்கம் சற்று குறைந்து காணப்படும்-. தேவைகள் நிறைவேற மற்றவர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். உற்றார் உறவினர்கள் உதவியாக இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் பிற மொழி நபர்களால் புதிய வாய்ப்பு கிடைக்கும். வேலையில் பணிச்சுமை குறையும். துலாம் இன்று குடும்பத்தோடு வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். வருமானம் இரட்டிப்பாகும். வெளிவட்டார நட்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினைகள் குறையும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் நற்பலனை தரும். விருச்சிகம் இன்று உங்களுக்கு தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். குடும்பத்தில் பெண்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் வேலையில் சற்று நிதானமாக செயல்படுவது நல்லது. வியாபார ரீதியான பயணங்களால் அனுகூலப்பலன் கிட்டும். தனுசு இன்று உங்கள் ராசிக்கு பகல் 12.47 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் பிடிப்பு இல்லாமல் செயல்படுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. மதியத்திற்கு பின் மன அமைதி உண்டாகும். மகரம் இன்று உங்கள் ராசிக்கு பகல் 12.47 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. வியாபார ரீதியான பிரச்சினைகளில் சற்று அமைதி காப்பது நல்லது. வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கை வேண்டும். கும்பம் இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் நல்ல லாபம் உண்டாகும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எந்த வேலையிலும் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். மீனம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை நிலவும். நண்பர்களுடன் சிறு மனக்கசப்பு ஏற்படலாம். உடலில் வலிகள் வந்து நீங்கும். சேமிப்பு குறையும். உறவினர்கள் கை கொடுத்து உதவுவார்கள். அயராத உழைப்பால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். தெய்வ வழிபாடு நன்மையை கொடுக்கும்.

இன்றைய ராசிபலன் – (28.04.2023)

மேஷம் இன்று உங்களுக்கு குடும்பத்தினரால் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில் சற்று மந்த நிலை ஏற்படும். உற்றார் உறவினர்களால் வீண் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். விட்டு கொடுத்து செல்வது நல்லது. வியாபார… Read More »இன்றைய ராசிபலன் – (28.04.2023)

இன்றைய ராசிபலன் –  27.04.2023

மேஷம் இன்று உறவினர்கள் வருகையால் மனநிம்மதி குறையலாம். கொடுத்த கடன் பெறுவதில் தாமதம் உண்டாகும். தொழில் முன்னேற்றத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிட்டும். எடுக்கும் முயற்சிகளுக்கு நண்பர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். ரிஷபம் இன்று பிள்ளைகள் வழியில் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். நண்பர்களின் ஆலோசனைகள் வியாபாரத்தில் நற்பலன்களை தரும். உங்கள் மீதிருந்த பழிச்சொற்கள் நீங்கும். ஆன்மீக காரியங்கள் செய்வதற்கான வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் பணிச்சுமை குறையும். மிதுனம் இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டி இருக்கும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண பற்றாக்குறையை தவிர்க்கலாம். புதிய பொருட்களை வாங்கும் போது கவனமாக இருப்பது நல்லது. எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். கடகம் இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். உறவினர்களால் உங்கள் பிரச்சினைகள் குறையும். எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி கிட்டும். சிந்தித்து செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் நல்ல லாபத்தை அடைவீர்கள். உத்தியோகத்தில் சக நண்பர்களின் ஆதரவு கிட்டும். சிம்மம் இன்று பிள்ளைகள் வகையில் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியூரிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும். கன்னி இன்று குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பூர்வீக சொத்துகளால் நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் அறிமுகத்தால் நற்பலன்கள் கிட்டும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழச்சியை தரும். துலாம் இன்று நீங்கள் எந்த செயலையும் மனமகிழ்ச்சியுடன் செய்வீர்கள். பிள்ளைகள் பொறுப்புடன் இருப்பார்கள். உத்தியோகத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் நல்ல லாபம் கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும். விருச்சிகம் இன்று வேலையில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். மனைவி வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். தொழிலில் இருந்த தேக்க நிலை பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் மாறும். சுபகாரியங்கள் கைகூடும். தனுசு இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் செயல்களில் சற்று கவனத்துடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறுசிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது உத்தமம். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மகரம் இன்று நீங்கள் எடுக்கும் காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் சுமூக உறவு உண்டாகும். கும்பம் இன்று நீங்கள் செய்யும் செயல்களில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். இதுவரை இருந்த குழப்பங்கள் பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறையும். உத்தியோக ரீதியான பயணங்களில் பெரிய மனிதர்களின் அறிமுகம் கிட்டும். சுப காரிய பேச்சுவார்த்தைகளில் சாதகமான பலன்கள் உண்டாகும். மீனம் இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்ய நேரிடும். உற்றார் உறவினர்களின் செயல்களால் மனநிம்மதி குறையும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வது, எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபார ரீதியாக லாபம் அதிகரிக்கும், மறைமுக பகை நீங்கும்.

இன்றைய ராசிபலன் – 26.04.2023

  • by Authour

இன்றைய ராசிப்பலன் – 26.04.2023 மேஷம் இன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் இருக்கும். உத்தியோகத்தில் போட்டி பொறாமைகள் குறையும்.… Read More »இன்றைய ராசிபலன் – 26.04.2023

இன்றைய ராசிபலன்…..(25.04.2023)….

செவ்வாய்கிழமை: ( 25.04.2023 ) நல்ல நேரம்   : காலை:  7.30-8.30, மாலை: 4.30-5.30 இராகு காலம் :  03.00-04.30 குளிகை  :  12.00-01.30 எமகண்டம் :  09.00-10.30 சூலம் : வடக்கு சந்திராஷ்டமம்: அனுஷம்.  … Read More »இன்றைய ராசிபலன்…..(25.04.2023)….

இன்றைய ராசிபலன் – (24.04.2023)

மேஷம் இன்று நீங்கள் நினைத்த காரியத்தை செய்து முடிக்க சில இடையூறுகள் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் இருந்தாலும் அனுகூலப்பலன் கிடைக்கும். திருமண சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம்… Read More »இன்றைய ராசிபலன் – (24.04.2023)

குருபெயர்ச்சி பலன்கள்…. ( 2023 – 2024)….

மேஷம் – குரு பெயர்ச்சிப் பலன்கள் லட்சிய கனவுகளுடன் வாழும் மேஷ ராசி அன்பர்களே, இதுவரை உங்கள் ராசிக்கு விரையஸ்தானமான மீனராசியில் அமர்ந்து செலவுகளையும், தேவையற்ற மனஸ்தாபங்களையும் தந்து கொண்டிருந்த குருபகவான் தற்போது உங்கள்… Read More »குருபெயர்ச்சி பலன்கள்…. ( 2023 – 2024)….

இன்றைய ராசிபலன்…. (22.04.2023)

மேஷம் இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேற உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும். பெண்கள் வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஆதரவு மகிழ்ச்சியை தரும். ரிஷபம் இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும். புதிய பொருட்கள் சேரும். கூட்டு தொழிலில் இருப்பவர்களுக்கு கூட்டாளிகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு அமையும். மிதுனம் இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடம் ஒற்றுமை குறையும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் சற்று பாதிப்புகள் ஏற்படும். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு சிறப்பாக இருக்கும். பெற்றோர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும். கடகம் இன்று இல்லத்தில் தாராள தன வரவும், லஷ்மி கடாட்சமும் உண்டாகும். உத்தியோகத்தில் ஒரு சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் போட்டி பொறாமைகள் குறையும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். சிம்மம் இன்று உங்கள் மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவால் எடுக்கும் முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் தொடர்பாக நவீன கருவிகள் வாங்கும் எண்ணம் எளிதில் நிறைவேறும். சுப காரியங்கள் கைகூடும். எதிர்பாராத வகையில் வருமானம் பெருகும். கன்னி இன்று உங்களுக்கு பொருளாதாரம் சற்று சுமாராக இருக்கும். அருகில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலங்கள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் சற்று நிதானம் தேவை. சொந்த தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் வரும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. துலாம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் வேலைகளில் தடங்கல்கள் ஏற்படும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் நிதானமாக செயல்படுவது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. பணியில் கவனம் தேவை. விருச்சிகம் இன்று உங்களுக்கு பணவரவுகள் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் வகையில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். வேலையில் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் உண்டாகும். பெண்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தனுசு இன்று குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமை நல்லபடியாக இருக்கும். உறவினர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். திடீர் என்று நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பல போட்டிகளுக்கு இடையே வெற்றி ஏற்படும். புதிய பொருட்களை வாங்குவீர்கள். இதுவரை வராத கடன்கள் வசூலாகும். மகரம் இன்று உங்களுக்கு உறவினர் வருகையால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றாலும் வீண் செலவுகளும் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில்  முன்னேற்றம் ஏற்படும். உடல் உபாதைகள் குறையும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். கும்பம் இன்று உங்களுக்கு மனதில் குழப்பமும் கவலையும் உண்டாகும். குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும் சூழ்நிலை உருவாகலாம். பொறுப்புடன் செயல்பட்டால் வியாபாரத்தில் இழப்புகளை தவிர்க்கலாம். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மீனம் இன்று நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிடைக்கும். எதிரியாக இருந்தவர் கூட நண்பராக மாறி செயல்படுவார். தொழில் ரீதியாக வெளியூர் நபர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும்.

error: Content is protected !!