கரூர் சம்பவ இடத்தில் தொடர்ந்து ஐந்து மணி நேரமாக நடைபெறும் சிபிஐ விசாரணை – அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருவதால் வெறிச்சோடிய வேலுச்சாமிபுரம்.
கரூர், வேலுச்சாமி புரத்தில் கடந்த மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கிய 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இன்று சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரம் பகுதியில் காலை 11:00 மணியில் இருந்து சிபிஐ எஸ்.பி பிரவீன் குமார் தலைமையில் 12 பேர் கொண்ட அதிகாரிகள்
குழு விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அங்குள்ள வணிக வளாகத்தில் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதன் தொடர்ச்சியாக வேலுச்சாமிபுரம் பகுதியில் 500 மீட்டர் தூரத்திற்கு கயிறுகள் மூலம் தடுப்புகள் ஏற்படுத்தி, 3d டிஜிட்டல் ஸ்கேனர் மூலம் அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. வாகன போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தப்பட்டதாலும், பொதுமக்களை அனுமதிக்காத காரணத்தால் அப்பகுதியில் இருக்கும் உணவகங்களை தவிர்த்து ஜுவல்லரி, அடகு கடை, ஜெராக்ஸ் மற்றும் பேன்சி கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அப்பகுதிக்குள் பொதுமக்களை அனுமதிக்காத காரணத்தால் 30 க்கும் மேற்பட்ட கடைகள் பூட்டப்பட்டுள்ளது.

