கரூர், வேலுச்சாமிபுரம் சம்பவ இடத்தை முதன் முறையாக ஆய்வு செய்யும் சிபிஐ அதிகாரிகள் – சூடுபிடித்துள்ள கரூர் வழக்கில், சாட்சியங்களை விசாரித்த நிலையில், சம்பவ இடத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர், வேலுச்சாமி புரத்தில் கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர்.
வழக்கு தொடர்பாக கடந்த 17ம் தேதி முதல் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகளிடம் சாட்சியங்கள் பெறுவதற்காக சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பிய நிலையில், 4 பேர் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர்.
வழக்கின் விசாரணை அதிகாரியான சிபிஐ கூடுதல் SP அளித்திருந்த சம்மன் அடிப்படையில்,
சிபிஐ அதிகாரிகள் தங்கி உள்ள சுற்றுலா மாளிகைக்கு பொதுமக்கள், போட்டோகிராபர்,

டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உரிமையாளர் என எஸ்.ஐ.டி தரப்பில் இதுவரை நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் ஆஜராகி உள்ளனர்.
இந்த நிலையில் சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரம் பகுதியில் முதன் முறையாக ஆய்வு செய்து வரும் சிபிஐ அதிகாரிகள் – சூடுபிடித்துள்ள கரூர் வழக்கில், சாட்சியங்களை விசாரித்த நிலையில்,

சம்பவ இடத்தில் எஸ் பி பிரவீன் குமார் தலைமையில் 12 சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலுச்சாமிபுரம் பகுதியில் சிபிஐ அதிகாரிகள் Faro focus என்ற துல்லியமான 3d டிஜிட்டல் மாதிரி படம் பிடிக்கும் கருவி மூலம் அளவீடு செய்து வருகின்றனர்.
மேலும் சம்பவம் நடந்த இடத்தையும், பிரேத பரிசோதனை காட்சிகளை பதிவு செய்த வீடியோகிராபர், பொதுமக்கள் என 3 பேரிடம் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

