அமேசான் CEO போனை ஹேக் செய்தாரா… சவுதி இளவரசர் …. ?

98
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் தனிப்பட்ட கணக்கிலிருந்து அனுப்பப்பட்ட வாட்ஸ்அப் செய்தியை அமேசான் நிறுவனர்  ஜெஃப் பெசோஸின்  தொலைபேசி  2018  ஆம் ஆண்டு மே 1ந்தேதி  ஹேக் செய்தது. பின்னர் இளவரசர் முகமது பின் சல்மான் பெசோஸின் தொலைபேசியில் ஊடுருவ ஒரு தீங்கிழைக்கும் வாட்ஸ்அப் வீடியோவை அனுப்பினார் என்று கார்டியன் செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ அனுப்பிய பிறகு “பெசோஸின் தொலைபேசியில் சில மணி நேரங்களுக்குள் பெரிய அளவிலான தகவல்கள் வெளியேற்றப்பட்டது” என்று செய்தி  மேலும் கூறுகிறது. பிப்ரவரி 2019-ல், லாரன் சான்செஸுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் “நெருக்கமான புகைப்படங்களை” வெளியிடுவதாக அச்சுறுத்தியதால் செய்தித்தாளின் உரிமையாளர் தன்னை அச்சுறுத்துவதற்கு முயற்சித்ததாக பெசோஸ் குற்றம் சாட்டி உள்ளார். மேலும் கசிந்த உரை மற்றும் புகைப்படங்கள் இந்த ஹேக்கிங்கோடு தொடர்புடையதாக இருக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
 
அமேசான் தலைமை நிர்வாக அதிகாரியின் தொலைபேசியை சவுதி அரசு அணுகியதாகவும், அவரது தனிப்பட்ட தகவல்கள் ஹேக் செய்யப்பட்டதாகவும் 2019 மார்ச் மாதம் பெசோஸின் பாதுகாப்புத் தலைவர் கூறியிருந்தார். அமேசான் தலைமை நிர்வாகிக்கும் சவுதி அரசாங்கத்துக்கும் இடையிலான உறவு கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே  நன்றாக இல்லை. பெசோஸின் சொந்தமான வாஷிங்டன் போஸ்டின் கட்டுரையாளர் மற்றும் சவுதி பத்திரிகையாளர் ஜமால் கசோகி கொலை செய்யப்பட்டதில் இருந்து இது நிலவி வருகின்றது. 

LEAVE A REPLY