சென்னை ராமாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், பெரியார் சாலை சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் வந்த இரண்டு பேரை மடக்கி சோதனை செய்தனர். அவர்களிடம் போதைக்காக பயன்படுத்தப்படும் வலி நிவாரண மாத்திரைகள் இருந்ததால் இருவரையும் கைது செய்தனர். விசாரணையில் இருவரும் ராமாபுரத்தை சேர்ந்த ரூபன் குமார் (27) மற்றும் பிரபு (29) என்பது தெரியவந்தது. அத்துடன் ரூபன் குமார் மீது ஐந்து வழக்குகளும் பிரபு மீது இரண்டு வழக்குகளும் ஏற்கனவே பதிவாகி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் இருந்து 405 போதை மாத்திரைகள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.
