கடந்த சில நாட்களாகவே சென்னையில் பல்வேறு தொழிலதிபர் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னையில் இன்று (செப்டம்பர் 18, 2025) அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருவது வருகின்றனர்.
இது சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்குகளைத் தொடர்புபடுத்தி நடைபெறுகிறது. குறிப்பாக, ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ராமகிருஷ்ணா ரெட்டி மற்றும் அவரது தொடர்புடைய நபர்களின் இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. MARG லிமிடெட் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை செய்து வருகிறார் ராமாகிருஷ்ணா.
சென்னை செளகார்பேட்டையில் தங்க நகை வியாபாரம் செய்து வரும் தொழிலதிபர் மோகன்லால் காத்ரி என்பவருடைய புரசைவாக்கம் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், துணை ராணுவப் படைகளின் (CRPF) பாதுகாப்புடன் நடைபெறும் இந்த சோதனைகள், மொத்தம் 5 இடத்தில் நடந்து வருகிறது.
அமலாக்கத்துறை அதிகாரிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவர்களின் அலுவலகத்திலிருந்து 4 வாகனங்களில் வந்து, காலை முதல் சோதனையைத் தொடங்கியுள்ளனர். இது கடந்த சில நாட்களாக நடைபெறும் தொடர் சோதனைகளின் தொடர்ச்சி, அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு முன் அரசியல் சூழலில் முக்கியத்துவம் பெறுகிறது.

