Skip to content

வரும் 17ம் தேதி சென்னை ஐகோர்ட்டில் மாஸ்க் கட்டாயம்… அதிரடி….

  • by Authour

சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வரும்  நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள்  நடவடிக்கைகளை  வருகிறது. இந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வண்ணம் அரசு மருத்துவமனைகளில் கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாஸ்க் கட்டாயம் 

இந்த நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏப்ரல் 17ஆம் தேதி முதல் கட்டாயமாக முககவசம் அணிய வேண்டும்  உயர்நீதிமன்ற உதவி பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு வரும் அனைவருக்கும் முகக்கவசம் கட்டாயம்; தனிமனித இடைவெளியையும் பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, உச்சநீதிமன்றத்திற்கு வரும் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!