Skip to content

திருச்சி வந்தடைந்தார் முதல்வர் ஸ்டாலின்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மேற்கொள்ளும் ‘சமத்துவ நடைபயணத்தை’ தொடங்கி வைப்பதற்காகத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை திருச்சி வந்தடைந்தார்.

இன்று காலை 8 மணியளவில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் திமுக, மதிமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ரோடு ஷோ: விமான நிலையத்தில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குச் செல்லும் வழியில், திருச்சி தலைமை தபால் நிலையத்தில் இருந்து தென்னூர் அண்ணாநகர் வரை முதலமைச்சர் ரோடு-ஷோ (Road Show) மூலம் பொதுமக்களைச் சந்தித்துச் சென்றார்.

திருச்சி தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை திடல் அருகே வைகோவின் சமத்துவ நடைபயணத்தை முதலமைச்சர் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.

error: Content is protected !!