Skip to content

குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடிய முதல்வர் ஸ்டாலின்…

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 72-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை தொண்டர்களைச் சந்திக்கிறார் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின்.

தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று 72-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, நேற்று முதலே அவருக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 முதல்வர் ஸ்டாலின் தனது பிறந்தநாளை இன்று காலை வீட்டில் மனைவி துர்கா, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினர்.  பின்னர், தனது பிறந்தநாளையொட்டி, பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்துகிறார். தமிழகம் முழுவதும் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தொண்டர்கள், நிர்வாகிகள் அனைவரும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி, இனிப்பு, வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
error: Content is protected !!