தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாண்டஸ் புயலால் பெய்த கனமழையின் காரணமாக, சோழிங்கநல்லூர் மண்டலம், வார்டு-194க்குட்பட்ட ஈஞ்சம்பாக்கம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 500 உணவுப் பொட்டலங்கள் மற்றும் அரிசி போன்ற மளிகைப் பொருட்களை வழங்கினார். உடன் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், எம்எல்ஏ ச. அரவிந்த் ரமேஷ், பெருநகர சென்னை மாநகராட்சி துணை மேயர் மு. மகேஷ்குமார், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளனர்.