தமிழகத்தின் துணை முதல்வரும் கழகத்தின் இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகஇன்று 23.05.2025ம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணியளவில் விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தர விருக்கின்றார். திருச்சிக்கு வருகை தரும் துணை முதல்வர் அவர்களுக்கு திருச்சி விமான நிலையத்தில் கழக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான மாண்புமிகு அண்ணன் கே.என்.நேரு தலைமையில் திருச்சி மாவட்ட செயலாளர்கள் க.வைரமணி, நதியாகராஜன் MLA ஆகியோர் முன்னிலையிலும் மாவட்ட திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகின்றது. அன்று மாலை 5.30 மணியளவில் திருச்சி ஒத்தக்கடையில் அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1350-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
இந் நிகழ்ச்சிகளில் திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட, மாநகர, அனைத்து ஒன்றிய நகர, பகுதி, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், முன்னாள் இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைசெயற்குழு, பொது்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள் கழக முன்னோடிகள், செயல்வீரர்கள் அனைவரும் தவறாது வருகை தந்து துணை முதல்வர் அவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் அவசியம் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர்.