Skip to content
Home » குழந்தை கடத்தல்…. தஞ்சை எஸ்பி எச்சரிக்கை…

குழந்தை கடத்தல்…. தஞ்சை எஸ்பி எச்சரிக்கை…

குழந்தை கடத்தல் குறித்து வதந்தியை சமூக வலைத்ளத்தில் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தஞ்சை மாவட்ட எஸ்.பி., ஆஷிஷ் ராவத் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது… கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் குழந்தைகள் கடத்தப்படுவதாக உண்மைக்கு மாறான, பொய்யான தகவல்கள் சமூக வலைதளங்கள் மூலமாக மக்கள் மத்தியில் பரவி வருகிறது. கும்பகோணம் அருகே சுவாமி மலை போலீஸ் நிலைய சரகத்திற்குட்பட்ட நாகக்குடி கடை வீதி கிராமத்தில் கடந்த 5ம் தேதி இரவு 11.30 மணிக்கு குடிபோதையில் சற்று மனநலம் குன்றிய ஒருவர் பொது மக்களிடம் அவதூறாக பேசிய காரணத்தினால் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் இந்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை குழந்தை கடத்தல் பற்றிய வீடியோ என்று முகநூலில் பொய்யாக சித்தரித்து பதிவிட்டவரின் மீது சுவாமிமலை போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே இதுபோன்று யாரும் குழந்தை கடத்தல் தொடர்பான வதந்தியை சமூக வலைதளத்தில் பரப்ப வேண்டாம். அவ்வாறு பகிர்பவர்கள் மீதும், குழந்தை கடத்தல் தொடர்பாக வரும் வதந்திகளை நம்பி சந்தேக நபர்களை தாக்குதல் போன்ற குற்ற சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் மீதும் சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

குழந்தை கடத்தல் தொடர்பாக வதந்தி மற்றும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனடியாக அவசர உதவி எண்: 100 க்கு தொடர்பு கொள்ள வேண்டும். இல்லையென்றால் போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண்: 04362-277009 மற்றும் 9498181221 என்ற எண்ணிலோ அல்லது அருகில் உள்ள போலீஸ் நிலையத்தையோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!