Skip to content

குழந்தை விற்பனை…. போலீஸ் விசாரணை.. 9மாத குழந்தை மீட்பு

ஈரோடு மாவட்ட சைல்ட் ஹெல்ப் லைன் மேற்பார்வையாளர் புவனேஸ்வரி , சைல்டு ஹெல்ப்லைனுக்கு பவானியில் குழந்தை விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்துள்ளதாக பவானி காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, பவானி போலீசார் விசாரணை நடத்தியதில், பவானி, பழனிபுரம் பகுதியைச் சேர்ந்த ஜானகி (47) மற்றும் செல்வி (37) ஆகிய இரு பெண்கள் பெங்களூரில் இருந்து பெண் குழந்தையை விலைக்கு வாங்கி வந்தது தெரிய வந்தது,‌ தொடர்ந்து அவர்களிடம் இருந்து ஒன்பது மாத பெண் குழந்தையை மீட்ட போலீசார் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குழந்தை உண்மையிலேயே விலைக்கு தான்‌ வாங்கி வந்தார்களா ? அல்லது கடத்தி வந்தார்களா ? யாரிடம் விற்பனை செய்ய இருந்தார்கள்.? மேலும் வேறு யாரேனும் இதில் உடைந்தையாக உள்ளார்களா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!