Skip to content

சின்ன பாப்பா பெரிய பாப்பா’ சீரியல் டைரக்டர் காலமானார்…

சன் டிவியில் ஒளிபரப்பாகி பிரபலமான ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ என்ற டி.வி தொடர் இயக்குனர் S.N.சக்திவேல் உடல்நலக்குறைவால் காலமானார். ‘இவனுக்கு தண்ணில கண்டம்’ என்ற படத்தை அவர் இயக்கி இருந்தார். இவர் கடைசியாக, விகடன் குழுமத்துக்காக DD Tamilல் ஒளிபரப்பான ‘பட்ஜெட் குடும்பம்’ என்ற டி.வி சீரியலை இயக்கினார்.

2009 ஆம் ஆண்டு நகுல், பூர்ணா நடித்த கந்தக்கோட்டை படத்தில் எஸ்.என். சக்திவேல் திரைக்கதை மற்றும் வசனம் எழுதி இயக்கினார். கே.பி.ஜெகன் இயக்கிய ‘என் ஆளோட செருப்பா காணோம்’ திரைப்படத்தில் எஸ்.சக்திவேல் தயாரிப்பாளராக அறிமுகமானார். ரிங் ரிங் (Ring Ring) (2025) மற்றும் பொய் இன்றி அமையாத உலகே (Poi Indri Amaiyathu Ulagu) (2023) போன்ற திரைப்படங்களையும் அவர் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

error: Content is protected !!