கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலையில் சித்திரை தேர் திருவிழா வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிவ தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ரத்தகிரீஸ்வரர் கோவில் இக்கோவில் 1017 படி மலை உச்சியில் உள்ளது. ஆண்டுதோறும் சித்திரை தேர் திருவிழா12 நாள் நடைபெறுவது வழக்கம். உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்தும் வெளி மாவட்டங்கள் வெளி மாவட்ட மாநிலத்திலிருந்தும் லட்சக்கணக்கான பொதுமக்கள் பக்தர்கள் கலந்து கொள்ளும் விழாவாக இருந்து வருகிறது. இச்சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் சித்திரை தேர் திருவிழா முதல் நாள் நிகழ்ச்சியாக
கொடியேற்றத்துடன் தொடங்கியது சுவாமி குதிரை வாகனம் அம்மன் புஷ்ப வாகனத்தில் வீதி உலா நடைபெறும் அதனைத் தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இளித்தனர் இத்தேரானது மூன்று நாட்கள் மூன்று கிலோமீட்டர் சுற்றி வரும் வலம் வரும் இதில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள் அதனைத் தொடர்ந்து 100க்கு மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து மழையை சுற்றியுள்ள மின் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன.