கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இன்று காலை 6.30 மணி முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
Video Player
00:00
00:00
கரூர் ஆண்டாங்கோவில் புதூர் பகுதியில் அமைந்துள்ள மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பரான பால விநாயகர் ப்ளூ மெட்டல் உரிமையாளர் தங்கராஜ் இல்லத்தில் சோதனை நடத்த வருமானவரித்துறை அதிகாரிகள் வந்தனர். அப்போது அந்த வீட்டின் வெளிப்புறக்கதவு பூட்டிக்கிடந்தது. இதனால் அந்த அதிகாரிகள் காம்பவுண்ட் சுவர் ஏறிக்குறித்து வீட்டுக்கள் சென்று சோதனை மேற்கொண்டனர்.