டில்லி செல்லும் முதல்வர் ஸ்டாலின்… பிரதமர் மோடி, சோனியாவை சந்திக்கிறார்..

120
Spread the love

தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முதன் முறையாக முதல்வராக பொறுப்பேற்றார். உடனடியாக கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் பிரதமரை சந்திக்க செல்லவில்லை.தற்போது, கொரோனா நோய் பரவல் தினமும் படிப்படியாக குறைந்து வருகிறது. எனவே, பிரதமரை சந்திப்பதற்காக 16ம் தேதி மாலை முதல்வர் ஸ்டாலின் டில்லி செல்கிறார். இரவு அங்கு தங்குகிறார். மறுநாள் காலை 10:30 மணிக்கு, பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். அப்போது, தமிழகத்தின் தேவைகள் தொடர்பாக 35 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்க உள்ளார்.

பிரதமர் உடனான சந்திப்பு முடிந்த பின், அமித் ஷா உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோரை சந்திக்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.

LEAVE A REPLY