முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் அவருக்கு லேசான தலை சுற்றல் ஏற்பட்டது. உடனடியாக முதல்வர் சென்னை கிரிம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர் சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தகவல் அறிந்ததும் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆஸ்பத்திரிக்கு வந்தார்.
ஸ்டாலினுக்கு தேவையான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுவதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியது.
சிறிது நேரத்தில் அமைச்சர்கள் மாசு, துரைமுருகன் ஆகியோரும் மருத்துவமனைக்கு வந்தனர்.