Skip to content

எல். கணேசன், தங்கபாலு உள்பட 10பேருக்கு விருது-முதல்வர் வழங்கினார்

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் திருவள்ளுவர் தின  விருது வழங்கப்படும்.  அதன்படி இன்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற  நிகழ்ச்சியில் 10 பெருந்தகையாளர்களுக்கு விருது, பொற்கிழி வழங்கினார்.

அதன்படி அய்யன் திருவள்ளுவர் விருது – மு.படிக்கராமு,  காமராஜர் விருது-  முன்னாள் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, பேரறிஞர் அண்ணா விருது –  திருச்சி முன்னாள் எம்.பி.  எல். கணேசன், மகாகவி பாரதியார் விருது கவிஞர் கபிலன், பேரறிஞர் பாவேந்தர் பாரதிதாசன் விருது – பொன்.செல்வகணபதி, தமிழ் தென்றல் திரு.வி.க. விருது – டாக்டர் ரவீந்திரநாத், முத்தமிழ் காவலர் விசுவநாதம் விருது – வே.மு. பொதியவெற்பன், தந்தை பெரியார் விருது – விடுதலை ராஜேந்திரன், அண்ணல் அம்பேத்கர் விருது – எம்.பி. ரவிக்குமார், முத்தமிழறிஞர் கலைஞர் விருது – முத்து வாவாசி உள்ளிட்டோருக்கு விருதுகளை முதலமைச்சர் வழங்கினார்.

விருதுவுடன் அதற்கான தகுதி உரை, காசோலைகள் மற்றும் தங்க பதக்கங்களை வழங்கி  முதல்வர்  பொன்னாடை போர்த்தினார்.  சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், செய்தித்துறை அமைச்சர் மு. பெ சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!