துபாயில் விமான கண்காட்சியில் நடைபெற்று வருகிறது. இந்தியா உட்பட 115 நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்று உள்ளன. நேற்று முன்தினம் பிற்பகல் 2.10 மணி அளவில் விமான சாகச கண்காட்சி நடைபெற்றது இதில் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து சென்ற தேஜஸ் எம்.கே 1 இலகு ரக போர் விமானத்தின் விமானி 37 வயது நமன்சியால் பறந்து சென்று

சாகசம் செய்த விமானம் திடீரென வானில் இருந்து தரையை நோக்கி பறந்து வந்து விழுந்து தீப்பிடித்து எறிந்தது. இதில் விமானி நமன் சியால் பரிதாபமாக இறந்தார்.இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. சூலூர் விமானப்படை தளத்தில் நமது சியான் குட் மார்னிங் கமாண்டராக பணியாற்றி வந்தார். இதனையடுத்து சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டுவரப்பட்ட அவரது உடலுக்கு கோவை மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஞ்சலி செலுத்தினார்.
இதுதொடர்பான செய்தியை ட்விட்டரில் பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “‘விங் கமாண்டர்’ நமன்ஷ் சியால் அவர்களுக்கு வீரவணக்கம்! அவரது உடல் கோவைக்குக் கொண்டுவரப்பட்ட காட்சிகளைக் கண்டு கலங்கினேன். கோவை சூலூர் விமானப்படை தளத்தில் பணிபுரிந்த அவருக்குத் தமிழ்நாடு தனது அஞ்சலியைச் செலுத்துகிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது தைரியம் என்றும் அழியாது” என பதிவிட்டுள்ளார்.

