Skip to content

முதல்வர் ஸ்டாலின் பேரணியில் இந்திய கம்யூ. பங்கேற்பு

இந்தியா, பாகிஸ்தான் போர் மூண்டுள்ள நிலையில்,  இந்திய ராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து  நாளை மாலை சென்னையில்  பேரணி நடக்கிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பேரணி நடக்கிறது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் பங்கேற்கும் என அதன் மாநில  செயலாளர் முத்தரசன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டு ஒட்டு மொத்த மக்களும் இந்திய ராணுவத்தோடு இணைந்து நிற்பார்கள் என்ற உணர்வை வெளிப்படுத்தும் முறையில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையில் நாளைசென்னையில் நடைபெறும் இந்திய ராணுவ ஆதரவுப் பேரணியில் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியும், அதன் வர்க்க, வெகு மக்கள் அமைப்புகளும் பங்கேற்கும் என்பதுடன்,   மக்கள் அனைவரும் இதில் பங்கேற்கும்படி இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

error: Content is protected !!