கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மநீம கட்சி திமுக கூட்டணியில் சேர்ந்தது. அந்த கட்சிக்கு போட்டியிட தொகுதிகள் வழங்கப்படவில்லை. வரும் 2025ல் ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்படும் என கூறப்பட்டது. அதன்படி கமல் போட்டியிட ஒரு ராஜய்சபா சீட் கொடுக்கப்பட்டது. அதில் கமல் வேட்புமனு தாக்கல் செய்தார்.
தமிழ்நாட்டில் இருந்து மொத்தம் 6 எம்.பிக்கள் தேர்வு செய்யப்படவேண்டும். கமல் உள்பட 6 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ததால், 6பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அதைத்தொடர்ந்து இன்று புதிய எம்.பிக்கள் பதவி ஏற்றனர்.
தமிழ்நாட்டில் இருந்து மநீம தலைவர் நடிகர் கமல்ஹாசன், திமுக சார்பில் வில்சன், எஸ்.ஆர். சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோர் இன்று ராஜ்யசபாவில் புதிய உறுப்பினர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். கமல்ஹாசன் மற்றும் திமுக எம்.பிக்கள் தமிழில் பதவியேற்றார். புதிதாக பதவியேற்ற எம்.பிக்களுக்கு ராஜ்யசபாவின் தற்காலிக தலைவர் வாழ்த்து தெரிவித்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், புதிய எம்.பிக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.அதிமுக எம்.பிக்கள் இருவரும் வரும் 28ம் தேதி பதவி ஏற்றுக்கொள்கிறார்கள்.