சுதந்திர இந்தியாவின் 2வது ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணன். இவர் ஆசிரியராக இருந்து ஜனாதிபதியாக உயர்ந்தவர். எனவே அவர் பிறந்த செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இன்று ஆசிரியர் தினம் என்பதால் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
“பாடப்புத்தகங்களைக் கடந்து மாணவர்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை பெற்றவர்கள் ஆசிரியப் பெருமக்கள்! நல்ல ஆசிரியர்கள் வாய்க்கப்பெற்ற மாணவர்கள், நல்லதொரு நாளை உருவாக்கும் திறம்பெற்றவர்கள். அறிவும் பண்பும் ஊட்டி, மாணவர்களுக்குத் திசைகாட்டியாக விளங்கும் நல்லாசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள் என்று கூறி உள்ளார்.