தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைசுற்றல் காரணமாக 4 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார். மருத்துவமனையில் இருந்தவாறே அரசு கோப்புகளை பார்வையிட்டார்.இதைத்தொடர்ந்து இல்லம் திரும்பினார். இன்று அவர் தலைமை செயலகம் வந்தார். அங்கு நடந்த பல புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார். உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்த ஆதிதிராவிட மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கினார்.
திருநங்கைகளுக்கான கொள்கை2025 வெளியிட்டார். பின்னர் புதிய போலீஸ் அலுவலகங்களையும், சார் பதிவாளர் அலுவலகங்களையும் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில் துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் துரைமுருகன், முத்துசாமி, கீதாஜீவன், ரகுபதி, மூா்த்தி, ஏ.வ. வேலு, மதிவேந்தன், தலைமை செயலாளர் முருகானந்தம், உள்துறை செயலாளர் தீரஜ்குமார், மணிவாசகம், ஜெயஸ்ரீ முரளிதரன், டிஜிபி சீமா அகர்வால், சென்னை போலீஸ் கமிஷனர் அருண்,