திருப்பத்தூர் அருகே பிளாஸ்டிக் ட்ரம்மில் பதுங்கி இருந்த நாகப்பாம்பை பிடித்த தீயணைப்புத் துறையினர். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சக்தி நகர் பகுதியை சேர்ந்த குரு மகன் இளங்கோ என்பவர் புதிய வீடு கட்டப்பட்டு வரும் நிலையில், அந்த வீட்டில் இருந்த பிளாஸ்டிக் ட்ரம்மை திறந்து பார்த்துள்ளனர். அப்போது உள்ளே நாகப்பாம்பு இருந்துள்ளது.
இதனைப் பார்த்த வீட்டின் உரிமையாளர் திருப்பத்தூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல்

கொடுத்துள்ளார். இத்தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் பிளாஸ்டிக் ட்ரம்மில் பதுங்கி இருந்த 6 ஆடி நிளமுள்ள நாகப்பாம்பை லாவகமாக தீயணைப்புத் துறையினர் பிடித்தனர். மேலும் நாகப்பாம்பை பிடித்து காப்பு காட்டு பகுதிக்கு தீயணைப்புத் துறையினர் எடுத்துச் சென்றனர்.

