கோவையில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் முத்தண்ணன் குளத்தில் கரைக்கப்படுவதால், நேரத்திற்கு தகுந்தவாறு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன் படி உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து பேரூர் செல்லும் அனைத்து வாகனங்களிலும் பேரூர் பைபாஸ் சாலை சிவாலயா தியேட்டர் சந்திப்பு வழியாக செல்ல வேண்டும், காந்திபுரம் டவுன்ஹாலில் இருந்து வைசியாள் வீதி, சலீவன் வீதி செல்லும் வாகனங்கள் உக்கடம், பேரூர் பைபாஸ் சாலை, சிவாலயா தியேட்டர் சந்திப்பு வழியாக செல்வபுரம் சென்று செல்லலாம்,
உக்கடம் வழியாக திருச்சி சாலை செல்லும் வாகனங்கள், சுங்கம் பைபாஸ் வழியாக செல்ல வேண்டும், உக்கடம் வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் ஒப்பனக்கார வீதி, பைவ் கார்னர், கடை வீதி, லங்கா கார்னர், ரயில் நிலையம் வழியாக காந்திபுரம் சென்று செல்ல வேண்டும்.
தடாகம் சாலையில் இருந்து மாநகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் ஜி.சி.டி சந்திப்பில் இடது புறம் திரும்பி, பாரதி பார்க், ஹோம் சயின்ஸ் வழியாக மேட்டுப்பாளையம் சாலையை அடைந்து செல்ல வேண்டும்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து வரும் வாகனங்கள், சங்கனூர் பாலம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி கணபதி, காந்திபுரம் வழியாக செல்லலாம். பேரூரில் இருந்து வரும் வாகனங்கள் செல்வபுரம் மேல் நிலைப் பள்ளி அருகில் வலது புறம் திரும்பி பேரூர் பைபாஸ் சாலை வழியாக உக்கடம் வந்து செல்லலாம், பேரூரில் இருந்து தடாகம் சாலைக்குச் செல்லும் வாகனங்கள் சிவாலயா தியேட்டர் சந்திப்பு, பணமரத்தூர், பூசாரி பாளையம், சீரநாயக்கன்பாளையம், சுகர்கேன் சாலை வழியாக மருதமலை சாலை அடைந்து லாலி ரோடு இடதுபுறமாக திரும்பி தடாகம் சாலை செல்லலாம்.
மருதமலையில் இருந்து மாநகரக்குள் வரும் வாகனங்கள் லாலி ரோடு இடதுபுறம் திரும்பி தடாகம் சாலை ஜி.சி.டி, பாரதி பார்க் வழியாக மேட்டுப்பாளையம் சாலையை அடைந்து செல்லலாம், அவிநாசி சாலை பழைய மேம்பாலத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் குட்செட் சாலை, மரக்கடை சந்திப்பு இடதுபுறம் திரும்பி தேசிய நெடுஞ்சாலை, பைவ் கார்னர், டவுன்ஹால் வழியாக உக்கடம் செல்ல வேண்டும்.
மருதமலை செல்லும் வாகனங்கள் சிவானந்தா காலனி, அழகேசன் சாலை சந்திப்பபை அடைந்து, தடாகம் சாலை ஜி.சி.டி, லாலி ரோடு ரவுண்டானா சென்று செல்ல வேண்டும், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை தொடர்ந்து போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இந்தப் போக்குவரத்து மாற்றமானது செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.