கோவை, பொள்ளாச்சி அருகே அங்கலக்குறிச்சி நரி முடக்கு வனப்பகுதியை ஒட்டி ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளது இங்கு அவ்வப்போது காட்டுப் பன்றிகள் மற்றும் யானைகள் முகாம் இடுவது வழக்கமாக இருந்து வருவதால் வனத்துறை அனுமதியுடன் விவசாயிகள் தங்கள் தோட்டங்களை சுற்றி மின்வெளி அமைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு யானைக் கூட்டம் செந்தில் என்பவரது தனியார் தோட்டத்துக்குள் புகுந்து அங்கு 30க்கும் மேற்பட்ட இரண்டு வயது 3 வயது உடைய தென்னை மரங்களின்
குருத்துகளை ஒடித்து ருசித்து சாப்பிட்டது இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர் மேலும் விவசாய நிலங்களுக்குள் காட்டு யானைகள் வராத வண்ணம் வனத்துறையினர் சுழற்சி முறையில் ஈடுபடுத்த வேண்டும் தென்னை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் 11 மணியளவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.