Skip to content

கோவை- சாலையை கடக்க முயன்ற கார்- பள்ளி பஸ் மோதிய சிசிடிவி..

தமிழக – கேரளா தேசிய நெடுஞ்சாலை கோவையில் இருந்து பாலக்காடு செல்லும் சாலையில் உள்ள குனியமுத்தூர் பகுதியில் கடந்த திங்கட்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் அப்பகுதியில் பள்ளி மாணவர்களுடன் வாகனம் ஒன்று வந்து கொண்டு இருந்தது. அப்பொழுது வேறு பகுதியில் இருந்து நெடுஞ்சாலை கடப்பதற்கு சர்வீஸ் சாலை வழியாக கார் வந்து கொண்டு இருந்தது. சர்வீஸ் சாலையை கடந்த போது வலது புறம் வரும் வாகனங்கள் கார் ஓட்டுனருக்கு தெரியவில்லை, இதனால் வேகமாக கடந்து விடலாம் என்று சர்வீஸ் சாலையை கடந்து நெடுஞ்சாலையில் வாகனத்தை இயக்கிய போது அப்பகுதியில் வலது புறமாக நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்த பள்ளி பேருந்து காரின் மீது மோதி சிறிது தூரம் இழுத்துச் செல்கின்றது. அந்தக் காட்சி அப்பகுதியில் கடையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. மேலும் அதில் பள்ளி பேருந்து அதிவேகமாக வந்ததால் மோதியதாக மலையாளத்தில் ஒரு நபர் பேசுகிறார். அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிய அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

error: Content is protected !!