Skip to content

கோவை-மாரியம்மன் கோவில் விழாவில் கோலாகல ஒயிலாட்டம்

கோவை துடியலூர் அடுத்த, நரசிம்ம நாயக்கன் பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம், சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிறுமிகள், இளம் பெண்கள் மற்றும் பெண்கள் குழுக்களாக பிரித்து ஒரே மாதிரியான வண்ணமயமான ஆடைகள் அணிந்து ஒயிலாட்டத்திற்கு கிராம மக்கள் மத்தியில் சங்கமம் கலைக் குழுவினர் கும்மி அடித்து நடனம் ஆடியது காண்போரை கண் கவரும் செய்தது.

error: Content is protected !!