புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் என்ற கிராமத்தை சேர்ந்தவர் க. வசந்தா, விவசாயி. இவர் திருந்திய சாகுபடி மூலம் நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற்றதற்காக குடியரசு தின விழாவில் முதல்வர் ஸ்டாலினிடம் ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசுடன், நற்சான்றிதழும் பெற்றார்.
அதைத்தொடர்ந்து வசந்தா, புதுக்கோட்டை வந்து முதல்வர் வழங்கிய சான்றிதழை கலெக்டர் கவிதா ராமுவிடம் காட்டி வாழ்த்து பெற்றார். அப்போது பயிற்சி உதவி கலெக்டர் ஜெயஸ்ரீ, வேளாண் இணை இயக்குனர் பெரியசாமி மற்றும் வேளாண் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.