அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், உலக விண்வெளி வார விழாவினை முன்னிட்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகம் சார்பாக பெரம்பலூர் சீனிவாசன் பல்கலைகழகத்தில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிப்பெற்ற அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமியை சந்தித்து விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்துப்பெற்றனர்.
திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரியில் அமைந்துள்ள இந்திய அரசு விண்வெளி துறையின் கிழ் இயங்கிவரும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன உந்தும வளாகம் சார்பாக உலக விண்வெளி வார விழாவினை முன்னிட்டு 09.10.2025 முதல் 11.10.2025 வரை பெரம்பலூர் சீனிவாசன் பல்கலைகழகத்தில் பேச்சுப்போட்டி, வினாடி வினா

மற்றும் ஓவியப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 5 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
அதன்படி கீழப்பழுவூர், அரியலூர் மாவட்ட அரசு மாதிரிப்பள்ளியை சேர்ந்த 9 ஆம் வகுப்பு மாணவி N.காவியா இளையோர் பிரிவு பேச்சுப்போட்டியில் முதல் பரிசும், 10 ஆம் வகுப்பு மாணவி மு.மிருதுளா மேலோர் பிரிவு பேச்சுப்போட்டியில் இரண்டாம் பரிசும் பெற்றுள்ளனர். இதேபோன்று அரியலூர் மாண்ட்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவன் உ.ராகுல் ஓவியப்போட்டியில் முதல் பரிசு, 9 ஆம் வகுப்பு மாணவி அ.எஸ்தர் கேத்தரின் இரண்டாம் பரிசும், வினாடி வினாப் போட்டியில் 12 ஆம் வகுப்பு மாணவன் பா.பிரதீஸ்ராஜ் இரண்டாம் பரிசு, 12 ஆம் வகுப்பு மாணவன் பொ.மு.நபி இரண்டாம் பரிசு, 12 ஆம் வகுப்பு மாணவி பி.அட்சயா இரண்டாம் பரிசும், பேச்சுப்போட்டியில் 12 ஆம் வகுப்பு மாணவி செ.பி.பியாசென் இரண்டாம் பரிசும் பெற்றுள்ளதை தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமியை நேரில் சந்தித்து தங்களுக்கு வழங்கப்பட்ட விருதுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்துப்பெற்றனர்.
இந்நிகழ்வில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) பாலசுப்ரமணியன், மாவட்ட கல்வி அலுவலர் சித்ராதேவி, கீழப்பழுவூர், அரியலூர் மாவட்ட அரசு மாதிரிப்பள்ளி தலைமையாசிரியர் கருணாகரன், இதர அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

