கல்லூரி மாணவர் திடீர் மாயம்
திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம் மணல்வாரித்துறை சாலையை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவரது மகன் டேனியல் ( 19). இவர் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த ஒரு வாரமாக கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். தான் வேலைக்கு செல்வதாக கூறியுள்ளார். இந்த நிலையில் கடைக்கு செல்வதாக கூறி தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். பின்னர் வெகு நேரமாகியும் அவர் வீட்டிற்கு வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவரை எங்கு தேடியும் கிடைக்காததால், அவரது பெற்றோர் இது குறித்து பாலக்கரை போலீஸ் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டேனியலை தேடி வருகின்றனர்.
செப்புக்குழாய் திருடிய பாலக்கரை தொழிலாளி கைது
திருச்சி அரசு மருத்துவமனை புதிய லேபர் வார்டில் குளித்தலையை சேர்ந்த அண்ணாத்துரை ( 47) என்பவர் காவலாளியாக பணியில் இருந்தார். அப்போது அந்த வார்டு அருகே இருந்த செப்பு குழாய்யை மர்ம நபர் ஒருவர் திருட முயன்ற உள்ளார். இதைப் பார்த்த அண்ணாத்துரை பொது மக்கள் உதவியுடன் அவரை கையும் களவுமாக பிடித்து திருச்சி அரசு மருத்துவமனை போலீசில் ஒப்படைத்தார். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் பாலக்கரை காஜாப்பேட்டை பகுதியை சேர்ந்த பாபுஜி (50) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் பாபுஜியை கைது செய்தனர்.
திருச்சி விமான நிலையத்தில் 2 வாலிபர்கள் கைது
ராமநாதபுரம் மாவட்டம் கடலடி வடக்கு தெருவை சேர்ந்தவர்கள் ராஜதுரை ( 26 ) , உமையர் தங்கம் (31). இவர்கள், மலேசியாவில் இருந்து நேற்றுமுன்தினம் திருச்சி திரும்பினர். விமான நிலையத்தில் இமிகிரேசன் அதிகாரிகள், அவருடைய பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தபோது போலி முத்திரைகள் மூலம் பாஸ்போர்ட் பெற்று மலேஷியா சென்று வந்தது கண்டுபிடிக்க பட்டது. இதை யடுத்து இமிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் அவர்கள் இருவரையும் விமான நிலையங்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர் வழக்கு பதிவு செய்து இரண்டு பேரையும் கைது செய்தனர்.

