ஏகலைவன் இளைஞர் பேரவை தமிழ்நாடு சார்பில் இன்று அதன் தலைவர் வடிவேல் திருச்சி ஐஜி அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளிக்கப்பட்டது
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது ;- திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்த விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் கல்லூரியின் நெருக்கடி காரணமாக தற்காலைக்கு மேட்டராக தகவல் கிடைத்தது. அதன்படி விசாரித்த போது அங்கு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மனரீதியாகவும் மாணவிகளுக்கு பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தல் அளிப்பதாக தகவல் கிடைத்தது இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே தாங்கள் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது மனு அளித்த போது, காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவர் பஜார் மைதீன், முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக மாநில பொதுச் செயலாளர் இடிமுரசு இஸ்மாயில், மாவட்ட செயலாளர் ரபீக் ராஜா, வழக்கறிஞர்கள் அல்லூர் பிரேம் ஹக்கீம் பரணி குமார் துவாக்குடி ஸ்ரீதர் பாலகிருஷ்ணன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
