சென்னை கோயம்பேடு நூறடி சாலையில் உள்ள தங்கும் விடுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ந் தேதி விபசார தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள அறை ஒன்றில் வாடிக்கையாளர்களுக்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட கே.கே.நகரை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவியை போலீசார் மீட்டனர். மேலும் மாணவியை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக ஆந்திர மாநில துணை நடிகை நாகலட்சுமி, அஞ்சலி, கார்த்திக் குமார் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.மாணவியை விபாசாரத்தில் தள்ளிய கொடுமை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியபோது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. மாணவியின் தந்தை திடீரென இறந்துப்போனதால் அவரது தாய் வேறு ஒருவரை திருமணம் செய்து சென்று விட்டார். இதனால் தனிமையில் தவித்த மாணவி கே.கே.நகரில் உள்ள தாயின் தோழியான கிளப் டான்சர் பூங்கொடி என்பவரது வீட்டில் தங்கி படித்தார்.
ஆதரவற்ற நிலையில் இருந்த மாணவியிடம் பூங்கொடி ஆசை வார்த்தை கூறி விபசாரத்தில் தள்ளினார். ஆரம்பத்தில் மறுத்த மாணவி , பின்னர் சொகுசு வாழ்க்கை, பணம், உயர் ரக ஆடை, ஐபோன், விலை உயர்ந்த பரிசு பொருட்கள் உள்ளிட்டவற்றால் மயங்கினார். இதற்கு மாணவியின் பெரியம்மா மகளான ஐஸ்வர்யா என்பவரும் உடந்தையாக இருந்து வந்து உள்ளார். மாணவியை முழுமையாக பாலியல் தொழிலில் தள்ளியுள்ளனர். மேலும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய பூங்கொடியும் வாடிக்கையாளர்களிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்தார்.
பூங்கொடிக்கு வசதி படைத்த வாடிக்கையாளர்களை ஏற்பாடு செய்து கொடுத்தது சினிமா பட இயக்குநரும் காமெடி பட நடிகருமான பாரதி கண்ணன் என்பது தெரியவந்தது. அவரிடம் கோயம்பேடு அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தியபோது பாரதி கண்ணன் மாணவியை பலருக்கு விருந்தாக்கியது தெரிய வந்தது. இதனையடுத்து பூங்கொடி, ஐஸ்வர்யா மற்றும் பாரதி கண்ணனை மகளிர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் படி மாணவியுடன் தொடர்ந்து உல்லாசத்தில் ஈடுபட்டு வந்த கட்டுமான நிறுவன ஊழியர் மகேந்திரன், திமுக நிர்வாகி ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கைதான பாரதி கண்ணன், மகேந்திரன் மற்றும் ரமேஷ் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட மாணவி தொடர்ந்து பள்ளிக்கு சென்று வந்து உள்ளார். அவர் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து யாரிடமும் தெரிவிக்காமல் இருந்து இருக்கிறார். கடந்த மாதம் விடுதியில் போலீசார் சோதனை செய்தபோது மாணவி சிக்கியதால் இருந்த விவகாரம் வெளிச்சத்ததுக்கு வந்து உள்ளது. காமெடி நடிகர் பாரதி கண்ணன் மாணவியை தனது சினிமா வட்டாரத்தில் உள்ள பலருக்கு விருந்தாக்கி உள்ளது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து மாணவியுடன் உல்லாசம் அனுபவித்த நபர்கள் யார் யார் என்ற விவரத்தையும் போலீசார் சேகரித்து வருகிறார்கள். அவர்கள் மீதும் கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
இதனையடுத்து கைதானவர்களின் செல்போன் எண்ணை வைத்து அவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து வருகிறார்கள்.
