நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக்குறைவு காரணமாக காலை 10:30 மணி அளவில் காலமானார். அவருக்கு வயது 67.1980, 90களில் நகைச்சுவையில் கொடிக்கட்டி பறந்தவர் நடிகர் கவுண்டமணி. காலத்தால் அழியாத பல காமெடி காட்சிகளுக்கு சொந்தக்காரர். கவுண்டமணி – செந்தில் காமெடிகளுக்கு இன்றும் ரசிகர்கள் உண்டு. அவை எவர்கிரீன் வகையை சேர்ந்தவை.1970-ம் ஆண்டு வெளியான ‘ராமன் எந்தன் ராமனடி’ படத்தின் மூலம் சிறிய கதாபாத்திரத்தில்


நடிகராக நுழைந்தார். 1971-ம் ஆண்டு வெளியான ‘தேனும் பாலும்’ படத்தில் சுப்பிரமணி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கவுண்டமணி.கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக நடித்து வரும் அவர் நடிப்பில் அண்மையில் வெளியானது ‘ஒத்த ஓட்டு முத்தையா’ திரைப்படம். கவுண்டமணிக்கு கடந்த 1963-ம் ஆண்டு சாந்தி என்பவருடன் திருமணம் நடைபெற்றது.இந்நிலையில் கவுண்டமணியின் மனைவி சாந்தி உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை 10.30 மணி அளவில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.