Skip to content

கம்யூ., தலைவர் நல்லக்கண்ணு காலமானார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தோழர் நல்லகண்ணு(101)உடல்நிலை சரியில்லாமல் கடந்த 24 நாட்களாக சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் 1.55 மணியளவில் நல்லக்கண்ணு காலமானார். அதி தீவிர சிகிச்சைகள் அளித்த போதும் முக்கிய உறுப்புகள் செயல் இழந்ததால் காலமானார்.

மக்கள் சேவைக்காக வாழ்நாள் முழுவதும் அர்ப்பணித்தார். தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்தவர் நல்லகண்ணு. நல்லக்கண்ணு முதுபெரும் கம்யூனிஸ் தலைவர் மற்றும் சுதந்திர போராட்ட தியாகியாவார். 18வது வயதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார் நல்லக்கண்ணு. பாரதியார், வஉசியால் கவரப்பட்டு மாணவப் பருவத்திலேயே போராட்ட களத்திற்கு வந்தவர் நல்லகண்ணு. வாழ்நாள் முழுவதும் அடிதட்டு மக்களின் நலனுக்காக உழைத்தவர். எளிமையின் அடையாளமாக திகழ்ந்தவர் நல்லகண்ணு.வௌ்ளையனே வௌியேறு போராட்டத்தில் இளைஞர்களை திரட்டி போராடியவர் நல்லக்கண்ணு. நல்லக்கண்ணு மறைவு கம்யூ கட்சி தோழர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!