கோகைன் என்ற போதை பொருள் பயன்படுத்தியதாக நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் தங்களை ஜாமீனில் விட வேண்டும் என ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி, நடிகர்கள் இருவருக்கும் இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கினர்.
அதன்படி ஸ்ரீகாந்த்தும், கிருஷ்ணாவும் தினமும் விசாரணை அதிகாரிகள் முன் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவை தொடர்ந்து இருவரும் இன்று அல்லது நாளை காலை சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்பு உள்ளது.