Skip to content

குழப்பத்தில் நடந்து முடிந்த தவெக நிர்வாகிகள் கூட்டம்

சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தவெக தலைமையகத்தில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் விவரம் வெளியிடப்பட்டது. அப்போது, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்கள், தாங்களும் மாவட்டச் செயலாளராக செயல்பட விரும்புவதாக விருப்பம் தெரிவித்தனர். தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா அக்னல் கூட்டத்தில் இருந்து திடீரென வெளியேறினார். மாவட்டச் செயலாளர் பதவி அவருக்கு வழங்கப்படாத அதிருப்தியில் அவர் வெளியேறியதாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து மேலும் சில பொறுப்பாளர்களும் தங்களுக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படவில்லை என அதிருப்தியில் வெளியேறிதாக நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், ஆலோசனைக் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளுடன், புஸ்ஸி ஆனந்த் தனியே ஆலோசனை நடத்தினார். பின்னர், ஜன.20-ம் தேதிக்குள், 2 துணைச் செயலாளர்கள், பொருளாளரைத் தேர்வு செய்து விவரங்களை தலைமைக்கு வழங்குமாறு தேர்வு செய்யப்பட்டுள்ள பொறுப்பாளர்களுக்கு, அறிவுறுத்தினார்.

error: Content is protected !!