தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தலைமையில் இன்று சென்னையில் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளுக்கு மேல் திமுகவில் கேட்டு பெற வேண்டும் என்பது குறித்து பேசப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் ஈரோடு கிழக்கு எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் சென்னை கூட்டம் குறித்துகேட்கப்பட்டது. அப்போது அழகிரி ஏன் இந்த ரகசிய கூட்டத்தை நடத்தினார் என்று தெரியவில்லை. இது குறித்து எனக்கு, தங்கபாலு, திருநாவுகரசு ஆகியோருக்கு தெரிவிக்கவில்லை. ஆரம்பத்தில் முன்னாள் தலைவர்கள் என்று அழைத்தனர், பின்னர் மூத்த தலைவர்கள் என்று அழைத்தனர். தற்போது முடிந்த தலைவர்கள் என்பதால் அழைக்கவில்லை போல என்றார்.