Skip to content

தஞ்சையில் 2024-25ல் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு..

2024-25 கல்வியாண்டில் தஞ்சை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு விழா தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி வரவேற்புரை ஆற்றினார். தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன் தலைமை தாங்கினார். தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி கே ஜி நீலமேகம், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமச்சந்திரன், தஞ்சை மாநகராட்சி மேயர் சன் ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வம், முதன்மை கல்வி அலுவலர் அண்ணாதுரை, மாவட்ட கல்வி அலுவலர் பழனிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இறுதியில் மாவட்ட கல்வி அலுவலர் மாதவன் நன்றியுரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 55 மாணவர்களுக்கும், 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற 45 மாணவர்கள் என மொத்தம் 100 மாணவ மாணவியர்களுக்கு பாராட்டி பொன்னாடை, சந்தன மாலை, சான்றிதழ், பாராட்டு கேடயம், புத்தக பை மற்றும் தென்னை கன்று வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தஞ்சை, திருவையாறு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி ஆகிய சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி செய்திருந்தார்.

error: Content is protected !!