புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரிலிருந்து காந்தி பெயரை நீக்கியதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பொன்னமராவதி காந்தி சிலை முன்பாக ஒரு நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட னர். தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராம. சுப்புராமன் தலைமை வகித்தார் .திரளான காங்கிரஸார் இதில் பங்கேற்றனர்.

