கோவை, பொள்ளாச்சியில் சுதந்திரப் போராட்டத் தியாகி வ உ சி யின் 154வது பிறந்தநாள் விழா, மலர் தூவி புகைப்படத்திற்கு மரியாதை செலுத்திய காங்கிரஸ் நிர்வாகிகள். பொள்ளாச்சி-செப்-5 தமிழகம் முழுவதும் மறைந்த சுதந்திரப் போராட்ட தியாகி வ உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் 154வது பிறந்தநாள் விழா பல்வேறு கட்சியினர் கொண்டாடி வருகின்றனர் இதை அடுத்து கோவை தெற்கு மாவட்ட
பொறுப்பாளர் எம் பி சக்திவேல் தலைமையில் பொள்ளாச்சி காமராஜர் பவனில் வ உ சி புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர் இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர், வ உ சி யின் சுதந்திரப் போராட்ட தியாக வரலாறுகள் பற்றி கட்சி நிர்வாகிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது மேலும் பாராளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இந்தியாவிற்கு மீண்டும் நல்லாட்சி அமையும் என தெரிவித்தனர் .