திருப்பத்தூர் மாவட்டத்தில், உணவுப் பொருட்கள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக நுகர்வோர் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
நுகர்வோர் உரிமைகள் விழிப்புணர்வு பேரணி, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தி

ல் இருந்து தொடங்கி தூய நெஞ்சக் கல்லூரி வரை நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டு, பொதுமக்களிடையே நுகர்வோர் உரிமைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
பேரணியின் போது,
“குடிமக்களே நுகர்வோர் சட்டம் அறிந்திருங்கள்”
“தரமற்ற பொருட்களை நிராகரிப்போம்”
“நுகர்வோர் சட்டம் குறை தீர்க்கும் ஆயுதம்”
“ஏமாற்றுவதை தவிர்த்திடு – நுகர்வோர் சட்டம் அறிந்திரு”
“தரமான சேவை பெற நுகர்வோர் உரிமைகள் அறிந்திருப்போம்”
“எடை குறைப்பு செய்ய அனுமதிக்க மாட்டோம்”
“கவனமாக பொருள் வாங்க வேண்டும்”
“காலாவதியான பொருட்களை வாங்குவதை தவிர்ப்போம்”
“நுகர்வோர் உரிமை மீறலை தவிர்ப்போம்”
“வாங்கிய பொருட்களுக்கு ரசீது கேளுங்கள்”
“உங்கள் உரிமைகளை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்”
எனும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி மாணவிகள் பேரணியாக சென்றனர்.
இந்த விழிப்புணர்வு பேரணியின் மூலம், பொதுமக்கள் நுகர்வோர் சட்டங்களை அறிந்து கொண்டு, தங்களின் உரிமைகளை பாதுகாத்து, தரமான பொருட்கள் மற்றும் சேவைகளை பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்த பேரணியில் மாவட்ட வளங்கள் அலுவலர் முருகேசன் தனி வட்டாட்சியர் பறக்கும் படை சிவசுப்பிரமணியம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

